அமெரிக்காவில் வீட்டிற்குள் நுழைந்து நாய்களைத் தூக்க முன்ற கரடியைப் பெண் ஒருவர் வெறும் கைகளாலேயே விரட்டிய வீடியோ டிக்டாக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புலியைப் பெண்கள் முரத்தால் விரட்டிய கதையை எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் அப்படியான காட்சிகளை யாராவது நேரில் பார்த்திருக்கிறார்களா என்றால் கேள்விக் குறிதான். ஆனால் ஒரு பெண் கரடியை கையால் விரட்டிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது அதைத் தான் நாம் இங்குக் காணப்போகிறோம் வாருங்கள் காணலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியில் அமெரிக்காவிலிருந்து ஒரு வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் கரடி ஒன்று சுற்றுச்சுவரை ஏறிக் குதிக்க முயன்றுள்ளது.
அப்பொழுது அந்த பெண்ணின் வீட்டிலிருந்த நாய்கள் அந்த கரடி யை நோக்கிப் பாய்ந்து குரைக்கத் துவங்கின. இதைக் கேட்டு வீட்டிற்குள்ளேயிருந்த வந்த அந்த பெண் அந்த நாய்களைக் கரடியிடமிருந்து பாதுகாக்கும் நோக்கி தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த கரடியைப் படித்துத் தள்ளிவிட்டு நாய்களைக் காப்பாற்றினார். இந்த காட்சிகள் அங்கிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
This woman just pushes a bear off her wall to save her dogs from a bear. And there were cubs. Imagine her trying to tell this story had there been no cameras. pic.twitter.com/JYocdZdDMx
— TheDaily (@StopTheCriminal) June 1, 2021
இந்த வீடியோ தற்போது டிக்டாக் போன்ற சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியான 6 மணி நேரத்தில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஷேர்களையும் பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த வீடியோ மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.