குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வினுக்கு திருமணமாகி, குழந்தைகள் இருப்பதாக பேச்சு கிளம்பிய நிலையில் அவர் அது குறித்த உண்மையை தெரிவித்துள்ளார்.
காதல் பற்றியும், தான் சிங்கிளா, கமிட்டடா என்பது குறித்தும் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மனம் திறந்து பேசியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார் அஸ்வின் குமார். 2020ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட டிவி நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டார் அஸ்வின். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து தற்போது அவர் பெரியதிரையில் ஹீரோவாகிவிட்டார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றில் அஸ்வின் தான் ஹீரோ. அந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழும் நடிக்கிறார்.
டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு மூன்று படத்தில் நடிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம் அஸ்வின். அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவர் போஸ்ட் செய்யும் புகைப்படங்களை பார்க்க ரசிகைகள் காத்துக் கிடக்கிறார்கள். பிரபலமாகியாச்சு, ஹீரோவும் ஆகியாச்சு, காதல் ஏதாவது இருக்கிறதா என்று அஸ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, கடந்த பல ஆண்டுகளாக நான் சிங்கிளாகத் தான் இருக்கிறேன் என்றார்.
நான் இப்போ தான் ஒரு நடிகராக என் கெரியரை துவங்கியிருக்கிறேன். அதனால் முதலில் சினிமாவில் கவனம் செலுத்த விரும்புகிறேன். காதல் இருந்தால் கெரியரை போன்றே அதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இருப்பினும் எனக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறது. காதல் தான் அனைத்துமே. ஒருவரிடம் இருந்து அன்பை பெறுவது அழகான விஷயம். அப்படிப்பட்ட நபர் என் வாழ்க்கையில் வரும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்கிறார் அஸ்வின்.
என்னை பற்றி பல வதந்திகளை கேள்விப்படுகிறேன். எனக்கு திருமணமாகி, குழந்தைகள் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்கள் என்னிடமே உண்மையை கேட்டிருக்கலாம். ஒருவரை நம்பும் முன்பு யோசிக்க வேண்டும். ஆனால் நம்பினால் முழுமையாக நம்ப வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். அஸ்வினுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று நினைத்த ரசிகைகளுக்கு அவர் சொன்ன தகவல் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் பெரியதிரையில் வாய்ப்பு கிடைக்கும் என்கிற காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வின், புகழ், சிவாங்கி, பவித்ரா லக்ஷ்மி ஆகியோர் ஏற்கனவே படங்களில் ஒப்பந்தமாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அஸ்வின் ஹீரோவாகிவிட்டார், பவித்ரா லக்ஷ்மி ஹீரோயினாகிவிட்டார்.