உதயநிதியிடம் கொரானா நிதி வழங்கிய பிரபல இயக்குனர்.. எவ்வளவு தெரியுமா?

Date:

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியிடம் இயக்குனர் லிங்குசாமி, கொரானா நிதி வழங்கினார்.

கொரானாவின் 2வது அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. கொரானாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதனால் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வேகமாக செயல்படுத்தி வருகிறது.

நிலைமையை சரி செய்ய தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது தமிழக அரசு. இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் கொரானா நிதி அளிக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இயக்குனர் ஷங்கர், வெற்றிமாறன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி, கொரானா பேரிடர் நிதியாக ரூபாய் 10 லட்சத்தை நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். இதேபோன்று பல்வேறு தரப்பினரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்