நேற்று 11 மாவட்டங்களில் 100 இற்கும் அதிக தொற்றாளர்கள்!

Date:

நாட்டில் 11 மாவட்டங்களில் இருந்து நேற்று 100 க்கும் மேற்பட்ட COVID-19 தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 2,912 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து, உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 186,364 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று, கொழும்பு மாவட்டத்தில் இருந்து 490 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். கம்பஹா மாவட்டத்தில் 322 பேரும், கண்டி மாவட்டத்தில் 261 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 260 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 150 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 149 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 145 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 126 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 124 பேரும், திருகோணமலை மாவட்டத்தில்111 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 102 பேரும், இரத்னபுரி மாவட்டத்தில் 98 பேரும், காலி மாவட்டத்தில் 94 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 91 பேரும், பதுளை மாவட்டத்தில் 65 பேரும், பொலன்னருவை மாவட்டத்தில் 57 பேரும், அம்பாறையில் 50 பேருட், மன்னார் மாவட்டத்தில் 46 பேரும், கேகாலை மாவட்டத்தில் 36 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 33 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 27 பேரும், வவுனியாவில் 16 பேரும், நுவரெஎலியா மாவட்டத்தில் 13 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேர், மொனாரகலை மாவட்டத்தில் 7 பேர் கண்டறியப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த 30 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின்...

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில்...

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்