அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்து: டார்சன் பட நடிகர் உள்பட 7பேர் உயிரிழப்பு!

Date:

டென்னசி மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஏரியில் விழுந்து மூழ்கியதில் பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் உள்ளிட்ட 7 பேர் உயிர் இழந்தனர்.

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு பாம்பீச் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அதில் விமானி உட்பட 7 பேர் பயணித்தனர்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெர்சி பிரிட்ஸ் என்ற ஏரியில் விழுந்து மூழ்கிவிட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த ரதர்போர்ட் மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல மணி நேர தேடுதலுக்கு பிறகு உடல் ஒன்று மீட்கப்பட்டது.

விமானத்தில் பயணித்த மற்ற 6 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையியே மூழ்கிய விமானத்தில் பிரபலமான டார்சன் படத்தில் நடித்த ஜோ லாரா-வும் பயணித்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரும் விபத்தில் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. பலியானவ்சர்களில் ஜோ லாரா வின் மனைவி க்வென் லாராவும் ஒருவர்.

மேலும் ஜெனிபர் ஜே. மார்ட்டின், டேவிட் எல். மார்ட்டின், ஜெசிகா வால்டர்ஸ், ஜொனாதன் வால்டர்ஸ், மற்றும் பிராண்டன் ஹன்னா இவர்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள் ஆவார்கள். விமான விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் மூழ்கிய விமானத்தின் பாகங்களையும், எஞ்சிய உடல்களையும் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிர் இழந்ததும், அதேபோல் உட்டா மாகாணத்தில் நடந்த மற்றொரு விமான விபத்தில் ஒருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்