விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தீகலவலசை நீர்வீழ்ச்சியில் போட்டோஷூட் நடத்திய இளைஞர்கள் மூன்று பேர் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடேரு கிராமத்தை சேர்ந்த நிரஞ்சன்,வினோத்குமார், நாகேந்திர குமார் ஆகியோர் தீகலவலசை நீர்வீழ்ச்சிக்கு சென்று மகிழ்ச்சியுடன் போட்டோஷூட் நடத்தி கொண்டனர்.
தண்ணீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்திய போது இளைஞர்கள் மூன்று பேரும் அங்குள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். மூன்று பேரின் ஆடைகளும் நீர்வீழ்ச்சியின் அருகில் இருப்பதை பார்த்த கிராமத்தினர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததை உறுதி செய்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீச்சல் வீரர்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களையும் தேடி வருகின்றனர். போட்டோஷூட் நடத்தும் போது நீரில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.