26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

யாழ் நகரம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகளாகியது!

1981ஆம் ஆண்டு அன்று ஆட்சியிலிருந்த ஐ.தே. கட்சி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவ ஒரு தேர்தலை ஜுன் 4ல் நடத்தியது. பாராளுமன்றத்தில் அதிகூடிய பெரும்பான்மையைக் கொண்ட தனது அதிகார வெறியை யாழ்ப்பாணத்திலும் நிலைநாட்ட படாதபாடுபட்டது.

31.05.1981 ஞாயிற்றுக்கிழமை நாச்சிமார் கோவிலடியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காவலுக்கு நின்ற பொலிஸ்காரர்களை சுட்ட சம்பவத்துடன் தேர்தல் கடமைகளுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் பொலிஸ்காரரும் சேர்ந்து யாழ்ப்பாணத்தை நிர்மூலமாக்கினர்.

கோவிலடியில் ஆரம்பித்த வன்முறை நகருக்கும் பரவியது! கே. கே. எஸ் வீதியிலிருந்த வீடுகளும் கடைகளும் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீமூட்டப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் பஸ்நிலையத்திற்கு முன்பாகவிருந்த 36 தொடர் வரிசைக் கடைகளில் பூபாலசிங்கம் புத்தகசாலை, மக்மிலன் புத்தக கடை, பொபி கபே, ராஜன் புத்தகசாலை, நியூ வசந்தாஸ், ஐங்கரன் ஸ்ரோர்ஸ், ராடோ கபே, றீகல் கூல்பார், வேலும் மயிலும் கடை, சிவாஸ் கூல்பார் (எல்லாவற்றையும் பெயிரிடவில்லை) போன்ற 27 கடைகள் பெற்றோல் ஊற்றி தீயிடப்பட்டன.

இதைவிட நவீனசந்தையில் உள்ள கடைகள், ஆஸ்பத்திரி வீதியலிருந்த கடைகள், கஸ்தூரியார் வீதிக் கடைகள் என எல்லாமே எரித்து நாசமாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரனுடைய வீடும் அவரதும் அவரது நண்பரதும் வாகனமும் எரிக்கப்பட்டன. வந்தவர்களுக்கு எம்.பி யாரெனத் தெரியாத காரணத்தால் மயிரிழையில் அவரும் அவரது மனைவியும் உயிர்தப்பினர். கூட்டணியின் காரியாலயமும் முற்றாக எரிக்கப்பட்டது.

சுன்னாகத்திலும்சில கடைகள் கடையுடைப்புக்கும், சூறையாடலுக்கும், தீவைப்புக்கும் உட்பட்டன

-தங்க. முகுந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

east tamil

தெங்கு அபிவிருத்தி சபையின் புதிய கொள்கை

east tamil

Leave a Comment