விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சனை காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் ஆராய்ந்த போது, அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்புடைய படங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1