நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையில் நெற்றிக்கண் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, மிலிந்த் ராவ் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இவர் ஏற்கனவே ’அவள்’ உள்ளிட்ட ஒருசில படங்களை இயக்கியுள்ளார். நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்.
தற்போது இறுதிகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் படத்துக்கான புரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணாமாக நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு க்ரிஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் நெற்றிக்கண் தொடர்பான புதிய அப்டேட் ஒன்றை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’இதுவும் கடந்து போகும்’ என்று தொடங்கும் இந்த பாடல் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகும் தேதி விரைவில் வெளியாகும் என்றும் விக்னேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுக்காக சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “இதுவும் கடந்து போகும்” பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.