3 மாடி வீட்டை ஆயுர்வேத திணைக்களத்திற்கு அன்பளித்த தம்பதி!

Date:

பதுளையை சேர்ந்த வர்த்தக தம்பதியினர் தமது மூன்று மாடி வீட்டை ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.

தொழிலதிபர் புத்ததாச சமரஜீவ (71 ) மற்றும் ஐரீன் ஹில்டா லியனகே (67 ) ஆகியோர் தாங்கள் வசிக்கும் பதுளை பேர்ள் என்ற என்ற வர்த்தக மையத்தை ஒட்டியுள்ள மூன்று மாடி கட்டிடத்தை நன்கொடையாக வழங்கினர்.

இந்த தம்பதியினரின் மரணத்திற்குப் பிறகு கட்டிடம், ஆயுர்வேத திணைக்களத்திற்கு முழுமையாக சொந்தமாகும். அதுவரை, முதல் தளத்தை ஆயுர்வேத திணைக்களத்தின் சிகிச்சை மையத்திற்கு பயன்படுத்தலாம்.

இந்த கட்டிடம் ஆயுர்வேத மத்திய மருந்தகத்துடன் இணைக்கப்பட்டு  சிறப்பு பாரம்பரிய சிகிச்சை மையமாக பராமரிக்கப்படும். ஆயுர்வேத மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு சிகிச்சையை இந்த மையத்திற்கு வருகை தந்து தினமும் பெறலாம் என்று ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் தில்ம பியோன்ரமதிலக தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்