24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
உலகம்

முதன்முறையாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சூகி!

மியன்­மா­ரின் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூகி நேற்று முன்தினம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப் படுத்­தப்­பட்­டார்.

சென்ற பெப்­ர­வரி 1ஆம் திகதி நடந்த ஆட்சி கவிழ்ப்­பிற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக நேற்று முன்தினம் அவர் வெளி­யு­ல­கில் காணப்­பட்­டார்.

ஆங் சான் சூச்­சி­யின் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய இராணு­வம் அவர் உட்­பட 4,000 பேரைத் தடுப்பு காவ­லில் வைத்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

சட்­ட­வி­ரோ­த­மாக தொலைத்தொடர்பு சாதனங்களை வைத்­தி­ருந்­தது, அர­சாங்க இரக­சிய சட்­டத்தை மீறு­வது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­கொள்­கி­றார்.

நீதி­மன்­றத்­தில் காணப்­பட்ட சூகி, 75, நல்ல உடல்நலத்­து­டன் இருந்­த­தா­க­வும் விசா­ர­ணைக்கு முன்பு அவ­ரது சட்­டக் குழு­வு­டன் 30 நிமிட சந்­திப்பு நடத்­தி­ய­தா­க­வும் அவ­ரது சட்டத்தரணி தாயே மவுங் மவுங் கூறி­னார்.

தனது சட்டத்தரணிக­ளு­ட­னான சந்­திப்­பின்­போது ‘மக்­க­ளின் ஆரோக்­கி­யத்தை விரும்­பு­வ­தாக’ அவர் சொன்­னார். மேலும் விரை­வில் கலைக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­படும் சூகியின் ஜன­நா­யக தேசிய லீக் கட்­சி­யைப் பற்றி­யும் அவர் வெளிப்படை­யாக குறிப்­பிட்­டார்.

“மக்­க­ளுக்­காக கட்சி நிறு­வப்­பட்­டது, எனவே மக்­கள் இருக்­கும் வரை கட்சி இருக்­கும்” என்று சூகி சொன்­ன­தாக மவுங் கூறி­னார்.

கடந்த நவம்­பர் மாதம் நடந்த தேர்­த­லில் சூகி­யின் கட்சி மோசடி செய்­த­தா­கக் கூறும் இராணுவ ஆட்­சிக் குழு­வின் தேர்­தல் ஆணை­யம் அவ­ரது கட்­சி­யைக் கலைக்­கப்­போ­வ­தாக ஆணை­யரை மேற்­கோள்­காட்டி வெளிவந்த வெள்­ளிக்­கி­ழமை ஊடக செய்தி தெரி­வித்­தி­ருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

420Kg நபரின் இறுதிச்சடங்கிற்கு உதவிய தீயணைப்புத்துறை!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஈரானின் ஏவுகணை எரிபொருள் உற்பத்தியை குறைத்த இஸ்ரேல் தாக்குதல்

Pagetamil

இராணுவச் சட்டம் அமல் எதிரொலி: தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்கத்துக்கு ஆதரவாக எம்.பி.கள் வாக்களிப்பு

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

Leave a Comment