‘வெப்பம்’ இயக்குநர் அஞ்சனா இயக்கத்தில் உருவாகும் ‘வெற்றி’ படத்தின் நாயகனாக திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற முகேன் ராவ்.
அதை தொடர்ந்து இரண்டாவதாக முகென் ராவ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
கவின் மூர்த்தி.கே இயக்கும் இந்தப் படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கென்னடி கிளப் படத்தில் நடித்த மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
வேலன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. அந்தவகையில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் முகேன் ராவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது வேலன் திரைப்படத்தில் வேலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.