விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா, மைனா நந்தினி, இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.
இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தனர். இப்போது புகழ், பாலா இருவரும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் புகழ், பாலா இருவரும் காரில் போகும்போது வழியில் ஒரு மாஸ்க் அணியாத போலீஸார் இவர்களை மடக்கி, “லாக்டவுனில் ஏன் வெளியே சுத்துறீங்க..?” அதற்கு, புகழும் பாலாவும் அவருடன் டிவி ஷோ என கூற, ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை கோபமாக மாற ” சார் மேல கை வைக்காதீங்க…மொதல்ல நீங்க மாஸ்க் போடுங்க…” என அந்த போலீஸையே மடக்குகிறார்கள்.
பின்னர் அவர் தங்களுடைய நண்பர் என்றும் ஒரு விழிப்புணர்வு வீடியோ தான் என்று கூறுகிறார்கள். இந்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக உலா வருகிறது