இந்தியாவில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறிய அஜாஸ் படேல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
21 வயதாகும் அஜாஸ் படேல், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். மொத்தம் 20 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து அறிவித்துள்ளது.
அஜாஸ் படேலின் பெற்றோர் மும்பையில்தான் வசித்து வந்தனர். படேலுக்கு 8 வயதாக இருந்தபோது இவரது குடும்பம் நியூசிலாந்தில் குடியேறியது. கிரிக்கெட் மீது நாட்டம் கொண்ட அஜாஸ் படேல், முதலில் வேகப்பந்து வீச்சாளராகத்தான் இருந்தார். அதன்பிறகு, லெப்ட் ஆர்ம் ஸ்பின்னராக மாறினார். தற்போது அவருக்கு 32 வயதாகிறது. தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி வருகிறார்.
தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுள்ள அஜாஸ் படேல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து பேசினார். “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் பிறந்த நாடான இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவதை எண்ணி மெய் சிலிர்க்கிறேன்” எனக் கூறினார்.
“நியூசிலாந்தில் குடியேறிய நான் அங்கிருந்துதான் என்னுடைய கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன். இப்போது கிரிக்கெட்டின் தாய் நாடான இங்கிலாந்தில் பலம் வாய்ந்த இந்தியாவுடன், அதுவும் நான் பிறந்த நாடுடன், எனது தாய் நாடான நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது அற்புதமான விஷயம்” எனத் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், சோதி போன்ற தரம் வாய்ந்த ஸ்பன்னர்கள் இருக்கின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், அஜாஸ் படேல் களமிறங்க முடியாத நிலை உள்ளது. இவர் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 33.32 சராசரியுடன் 22 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இரண்டுமுறை 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஜூன் 18ஆம் தேதி இந்தியாவுடன் விளையாடுவதற்கு முன்பு, ஜூன் 2ஆம் தேதிமுதல் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி பங்கேற்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.