யாழ் மாவட்டத்தில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இந்த மரணம் வீட்டில் சம்பவித்தது.
தென்மராட்சி, மீசாலை வ்டக்கு பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் வீட்டிலேயே உயிரிழந்தார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதியானது.
அவரது மகள் பளை பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றி வரும் நிலையில், கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தமையால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர் சாவகச்சேரி நகரில் சில தினங்களின் முன்னர் தனியார் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.




