கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில், அந்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் இணைக்கப்பட்ட சுகாதார பணியாளரை மருதானை பொலிசார் கைது செய்துள்ளனர்.
43 வது விடுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஒட்சிசன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளன.
திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரித்தபோது பெறப்பட்ட தகவல்களின்படி, திருட்டில் ஈடுபட்ட மற்றொரு சுகாதார ஊழியரை கைது செய்ய அவர்கள் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விடுதியில் ஒட்சிசன் சிலிண்டர் திருடப்பட்டதாக வெளிநோயாளர் பிரிவு தாதியொருவர் புகார் அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.




