புத்தளம் நகரசபை தலைவர் மரணம் தொடர்பில் 3 பேர் கைது!

Date:

புத்தளம் நகரசபை முதல்வர் கே.ஏ.பாயிஸின் மரணம் தொடர்பில் அவருடைய வாகன சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

எளுவன்குளம் பகுதியிலுள்ள ரால்மடம குளத்தில் நகர சபை முதல்வர் சிலருடன் குளித்துவிட்டு சென்ற சமயத்தில் விபத்திற்குள்ளானார். திறந்த வானத்தின் பின்புறத்தில் அவர் அமர்ந்து சென்ற சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டடோ அல்லது வேறு முறையிலோ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை 5.30 மணிக்கும் 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயங்களிற்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நகரசபை முதல்வர் உயிரிழந்தார்.

மரணம் தொடர்பில் பொலிஸார் பூரண விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்