இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று திட்டமிட்டபடி ஆரம்பிக்கவுள்ளது.
அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் சமிந்தவாஸ், அணி வீரர்கள் இசுரு உதான, சிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், கொரோனா தொற்றிற்குள்ளானதாக முடிவு வெளியானது.
இதையடுத்து, இன்றைய போட்டி ஆரம்பிக்குமா என்ற சந்தேகம் நிலவியது.
இன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில் சமிந்தவாஸ், இசுரு உதாணவிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானது.
இலங்கை அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஸிரான் பெர்னாண்டோவிற்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றிற்குள்ளாகி குணமடைந்திருந்தார். இறந்த கலங்கள் அவரது உடலில் இருந்து, கொரோனா சாதகமான பெறுபேறு ஏற்பட்டிருக்கலாமென இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
அதனடிப்படையில் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Hi Guys
Thank You for all the messages and calls.
2nd PCR is negative 🙏🏼
Appreciate all who were concerned.
We are good to go!— Chaminda Vaas (@chaminda_vaas) May 23, 2021