சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழை: மரதனில் பங்கேற்ற 21 வீரர்கள் பரிதாப பலி!

Date:

சீனாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையில் சிக்கி மரதனில் பங்கேற்ற 21 வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கு கன்சூ மாகாணத்தின் பைன் நகரில் உள்ள மலைப்பகுதியில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. இதில், 172 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாரத்தான் போட்டியின் போது ஆலங்கட்டி மழை, உறைபனி மற்றும் கனமழை காரணமாக 21 பேர் பலியானதாக அம்மாகாண ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவத்தில் காணாமல் போன ஒருவர் மீட்புப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்துள்ளது.இதன்மூலம் இந்த சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நகர அதிகாரிகள் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 20 இறப்புகளையும் ஒரு நபரைக் காணவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் மஹிந்த குடும்பத்தின் அதிர வைக்கும் ஊழல்கள்!

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே (Lady Ridgeway) சிறுவர் மருத்துவமனைக்கு CT...

பிள்ளையான், கூட்டாளிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்