கடந்த 1995-ம் ஆண்டு பிரிட்டன் இளவரசி டயானா பிபிசிக்கு அளித்த நேர்காணல் தொடர்பாகவும், அந்த நேர்காணல் எடுக்க செய்தியாளர் கையாண்ட முறைகள் குறித்தும் பிசிசியின் நேர்மைத்தன்மை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
பிரிட்டன் இளவரசர் சார்லஸின் முதல் மனைவி டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹாரி என்ற இரு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப்பின் சார்லஸுக்கும், பமீலாவுக்கும (தற்போதைய மனைவி) இடையே தொடர்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக கடந்த 1995-ம் ஆண்டு பி.பி.சி. சேனல் நிருபர் மார்ட்டின் பஷீர் டயானாவிடம் நேர்காணல் செய்தார். அந்த பேட்டியில் டயானா, “ தனக்கும் தனது கணவர் சார்லஸுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், சார்லஸுக்கும் பமீலாவுக்கும் இடையிலான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை” டயானா வெளிப்டையாகத் தெரிவித்தார்.
டாயானாவின் இந்த நேர்காணல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அரச குடும்பத்துக்குள்ளும் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. இதற்கிடையே கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி டயானாவை பேட்டி எடுக்க ஒரு பத்திரிகையாளர் துரத்தியபோது, அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் டயானா உயிரிழந்தார்.
இதனிடையே டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்ஸர் அளித்த பேட்டியில், “ தன் சகோதரி 1995-ம் ஆண்டு அளித்த நேர்காணல் அளித்தபோது அவரிடம் பேட்டி எடுத்த நிருபர் மார்டின் பஷீர் போலியான வங்கிக்கணக்கு, ஆவணங்களை அளித்து பேட்டி எடுக்கஅனுமதி பெற்றார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டயானா அளித்த பேட்டி குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் டைஸன் என்பது விசாரணை நடத்தி வந்தார். அவரின் விசாரணை முடிந்து 126 பக்க அறிக்கயை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் “ உலகளவில் செய்திக்கு மிகுந்த நேர்மையான ஊடகம் என்று பெயரெடுத்த பிபிசியின் நேர்மைத் தன்மை குறித்தும், பிபிசிநிருபர் டயானாவிடம் பேட்டி எடுக்க கையாண்ட வழிமுறைகள், அதை மூடி மறைத்த பிசிசியின் செயல்பாடுகள் , நேர்மைத் தன்மை ஆகியவை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இளவரசி டயானாவின் மகன்கள் இளவரசர்கள் வில்லியம், ஹாரி இருவரும் அளித்த பேட்டியில், “ தங்களுடைய தாய் டயானா அளித்த நேர்காணலுக்கும், விபத்தில் உயிரிழந்ததற்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறது” என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
நீதித்துறை செயலர் ராபர்ட் பக்லாண்ட் அளித்த பேட்டியில் கூறுகையில், “ டயானா அளித்த நேர்காணல் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அளித்த அறிக்கையின் முடிவில், பிபிசி செய்தாளர் மார்டின் பஷீர் 25 ஆண்டுகளுக்கு முன் வஞ்சகமான, நேர்மையற்ற முறையில் நடந்து நேர்காணல் பெற்றது தெரியவந்துள்ளது. ஆதலால், பிபிசி சேனலை நிர்வகிக்கும் விஷயத்தில் தனது விதிமுறைகளை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு நிருபர் அல்லது ஒரு செய்தி தயாரிப்புக் குழுவின் முடிவாக மட்டும் இது இல்லை. இந்த நபர்களின் முடிவைத் தொடர்ந்து சங்கிலி தொடர்பு போன்று அடுத்தடுத்து பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.
இந்த பேரழிவான அறிக்கைக்குப்பின், பிபிசி நிர்வாகத்தை சீரமைக்க முடிவு எடுக்க வேண்டுமா என்பதை கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி டைஸன் அறிக்கை வெளியாகும் முன்பிருந்தே, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு அவரின் கன்சர்வேட்டிங் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பிபிசியின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவித்துள்ளனர். பிபிசி சேனல் ஒரு தரப்பாக செயல்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டயானா நேர்காணல் குறித்து டைஸன் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் “ இந்த அறிக்கையைப் பார்த்து கவலை கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.