மன்னாரில் ஏராளம் ஏக்கர் காடழிப்பு: பின்னணி யார்?

Date:

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கஜூவத்தை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக முசலி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை மேய்ச்சலிற்காக விட இடம் இல்லாத நிலை காணப்படுகின்ற நிலையில், கஜூவத்தை பகுதியில் உள்ள பல ஏக்கர் அடர்ந்த காடுகள் அரசின் ஒத்துழைப்போது அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு தீ வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் மாடு மாய்க்கச் சென்றவர்கள் தமது கையடக்க தொலைபேசியில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேச சபையின் தவிசாளரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவிக்கையில்,

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கஜூவத்தை பகுதியில் அண்மைக்காலமாக பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றது. யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம் பெற்று வருகின்றது என்பது தெரியவில்லை.

அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகளை அழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...

‘தேனிசை தென்றல்’ தேவா உடலுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது...

அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர், தொழில​திபர் காவ்யா கலாநிதி மாறனின் திருமண வரவேற்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்