25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இந்தியா

கருப்பு பூஞ்சையை விட ஆபத்தான வெள்ளை பூஞ்சை தொற்று கண்டுபிடிப்பு!

கொரோனாவிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளில் மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்பு பூஞ்சைத் தொற்று குறித்த கவலைகளுக்கு மத்தியில், தற்போது பீகாரில் வெள்ளை பூஞ்சை பாதிப்புகள் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுரையீரலைத் தவிர உடலின் மற்ற உறுப்புகளையும் இது பாதிக்கும் என்பதால், வெள்ளை பூஞ்சை மியூகோர்மைகோசிஸை விட ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் வெள்ளை பூஞ்சை பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.என். சிங், இதுபோன்ற தொற்றுநோய் பாதிப்புகள் இன்னும் பலருக்கு இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீரிழிவு நோய், எய்ட்ஸ் நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று டாக்டர் சிங் கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பயன்படுத்துவதில் அலட்சியமாக உள்ள நோயாளிகளை வெள்ளை பூஞ்சை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இணைக்கப்பட்டுள்ள ஈரப்பதமூட்டியில் மக்கள் குழாய் நீரைப் பயன்படுத்துகிறார்கள். குழாய் நீரில் வெள்ளை பூஞ்சை இருக்கலாம். இது ஆக்ஸிஜன் ஆதரவில் உள்ள நபருக்கு மார்பு தொற்றுக்கு வழிவகுக்கும்” என்று டாக்டர் சிங் கூறினார்.

வெள்ளை பூஞ்சை அறிகுறிகள் கொரோனா அறிகுறிகளைப் போன்றே இருக்கும் எனக் கூரப்பப்டுகிறது. மேலும் சி.டி-ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும் என்றும் டாக்டர் சிங் கூறினார்.

இதற்கிடையே கருப்பு பூஞ்சையை தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் அறிவித்து முறையாக அனைத்து பாதிப்புகளையும் பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: தமிழக சட்டப் பேரவைச் சர்ச்சை!

Pagetamil

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

east tamil

Leave a Comment