சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையென்பது தெரிய வந்துள்ளது.
சுன்னாகம் மயிலங்காடு ஞானவைரவர் கோவில் பின் பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. அதன் பக்கத்தில் மண்ணெண்ணெய் கொள்கலன் ஒன்றும் காணப்பட்டது.
எஸ்.பத்மநாதன் (75) என்ற வயது முதியவரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனிமையில் வாழ்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை கோயிலுக்கு சென்றவர்கள், சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
இந்த சம்பவத்தில் குற்றச்செயல்கள் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தற்கொலை சம்பவமென்பது தெரிய வந்தது. முதியவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி உயிரை மாய்த்தது தெரிய வந்தது.