அரசியல் கைதிகள் விடயம்: தமிழ் எம்.பிக்கள்- அமைச்சர் தினேஷ் கலந்துரையாடல்!

Date:

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்குமிடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில் இன்று (20) காலை இந்த சந்திப்பு நடந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரம், வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன், வே.இராதகிருஷ்ணன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் அரச தரப்பில் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தமிழ் தரப்பினர் ஒப்படைத்தனர். விசாரணை முடியாத கைதிகள், தண்டனை வழங்கப்பட்ட கைதிகள் பற்றிய முழுமையான விபரத்தை கையளித்ததுடன், அவர்களை விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஆடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்