27.1 C
Jaffna
January 13, 2025
Pagetamil
மருத்துவம்

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற இதை குடிக்கலாம்!

கோவிட்-19 தொற்று என்பது மேல் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்று ஆகும். இந்த தொற்றால் பல இடங்களிலும் தொற்றுநோய் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நுரையீரலை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தினசரி சுவாச பயிற்சிகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், தொற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சில மூலிகை பானங்களை குடிப்பதன் மூலமும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

இதற்கு நாம் எதுவும் வாங்க வேண்டியதில்லை. நம் வீட்டின் அஞ்சறை பெட்டிகளில் மசாலா பொருட்களாக நாம் பயன்படுத்தும் சில மூலிகைகளே போதும்.

இஞ்சி – 1 சிறு துண்டு, பட்டை – 1 சிறிய துண்டு, ஒரு கைப்பிடி துளசி இலைகள், கொஞ்சம் கற்பூரவள்ளி இலைகள், மிளகு – 3, ஏலக்காய் – 2, சோம்பு – 1/4 தேக்கரண்டி, ஓமாம் – 1 சிட்டிகை, சீரகம் கால் தேக்கரண்டி ஆகியவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி அடுப்பை பற்ற வையுங்கள். பின் மேற்சொன்ன பொருட்களை எல்லாம் போட்டு, நன்கு கொதிக்க விடுங்கள். ஊற்றிய நீர் பாதியாகும் வரை நன்கு சுண்ட காய்ச்சி இறக்கி விடவும். அதன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, சற்று ஆறியதும் தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். சுவையான மூலிகை தேநீர் தயார்.

இந்த மூலிகை தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம். இந்த மூலிகை தேநீர் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குடிக்கக்கூடாது. இந்த பானத்தில் நிறைய மசாலாப் பொருட்கள் இருப்பதால், அனைத்தையும் ஒரே நேரத்தில் உட்கொள்வது பிரச்சினைகளை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த மூலிகை தேநீரை நீங்கள் குடித்தால், நீங்கள் நாள் முழுவதும் ஏராளமான தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் நச்சுகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாக இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment