காருக்குள் கிருமி நாசினியையும், சிகரெட்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திய ஒருவரின் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் காரின் முன் சீட்டில் அமர்ந்த வாகன ஓட்டி ஒருவர் புகை பிடித்துக்கொண்டே கிருமி நாசினியை பயன்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட தீ கார் முழுவதும் பற்றியது.
இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள், 911 என்ற அவசர எண்ணை அழைத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காரில் இருந்த வாகன ஓட்டி சரியான நேரத்தல் வெளியேற்றப்பட்டதால் சிறிய தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1