கிளிநொச்சியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்படுமா?

Date:

தர்மபுரம் கிராம சேவையாளர் பிரிவு விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலதிக தீர்மானம் இன்று (17) எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

நேற்றைய PCR முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சி தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 7ம் யூனிற் பகுதியில் 07 பேரும் 5ம் யூனிற் பகுதியில் 01 வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுத சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட கொவிட் செயலணி தெரிவித்துள்ளது.

மேலதிக விடயங்கள் தொடர்பில் இன்று ஆராய்ந்து தீர்மானம் எட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு–

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக...

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு...

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்