நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணகி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள வாவிக்கரை வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் முதலான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பொலிஸ் பிரிவில்்ககளில் பல பகுதிக, கிண்ணியா, பெரியகிண்ணியா, குட்டிக்கராச்சி, அல்தர் நகர், பெரியாத்துமனை, மலிந்தூர், ரஹுமானியான் நகர், சின்னகிண்ணியா, மண்வெளி, கட்டையாறு, குறிஞ்சான்கேணி, முனைச்சேனை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில், கிரிவுல்ல பொலிஸ் பிரிவில் ஹமன்கல்ல, நாரங்கொட வடக்கு, நாரங்கொட தெற்கு, பட்டபொதெல்ல, மல்கமுவ, தொடங்பொத்த மற்றும் நாரங்கமுவ முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் பியகம பொலிஸ் பிரிவில் பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் படியத்தலாவ பொலிஸ் பிரிவில் கெகிலுள்ள கிராம சேவகர் பிரிவில் கடுப்பஹர கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, மட்டக்களப்பு திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம், திருகோணமலையின் ஆண்டான்குளம் கிராமசேவகர் பிரிவில் சுபத்ரா லங்கா வீதி, சீனன்குடா பொலிஸ் பிரிவில் லக்கி விஜேரத்ன வீதி, நுவரெலியா மாவட்டத்தின வலப்பனை பொலிஸ் பிரிவில் நில்தந்தஹின்ன, ஹங்குரங்கொத்த பொலிஸ் பிரிவில் ரத்மட்டிய உள்ளிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் விடுவிக்கப்பட்டுள்ளது.








