26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
கிழக்கு

காரைதீவு சந்தியில் இருந்த பாபா தைக்காவை மீட்டுத்தர வேண்டும்: முபாரக் மௌலவி

அடிக்கடி தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னர் தமிழ் முஸ்லிம் மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள். அதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனும் செய்துகொண்டிருக்கிறார். அவர் கூறுவது போன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் நிலத்தை முஸ்லிங்கள் எங்கு கையகப்படுத்தியுள்ளார்கள் என்று அவரிடம் கேற்கிறேன். கொலோனி 12, 05 போன்றவற்றில் முஸ்லிங்களும், 7ஆம் கொலோனி, வீரமுனை போன்ற பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். இங்கு யாரும் யாருடைய நிலத்தையும் சுரண்ட வில்லை. அடாத்தாக யாரையும் குடியெழுப்பவும் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து முன்வைக்கப்படும் பிரச்சாரங்களே இவை என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இன்று கல்முனையில் அமைந்துள்ள அவருடைய காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

அப்படி யாராவது செய்திருந்தால் அவர்களுடன் நல்ல உறவை பேணிக்கொண்டு சம்பந்தன் ஐயாவின் வீட்டில் புரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக உள்ள ரவூப் ஹக்கீம் அவர்களிடம் பேசி தீர்க்கலாம். முஸ்லிங்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதையும் பேசி சாதிக்கும் நிலையே இருக்கிறது. கிழக்கில் தமிழர்களும், முஸ்லிங்களும் சகோதரர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையே சகோதரத்துவத்துடன் எழும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கவேண்டியது ஹக்கீமினதும், சம்பந்தனினதும் பொறுப்பே.

காரைதீவு முச்சந்தியில் இருந்த பாபா தைக்காவில் நானறிந்த வகையில் பல தசாப்தங்களாக முஸ்லிங்கள் தங்கி, இளைப்பாறி, தொழுது சென்றிருக்கிறார்கள். கடந்த 1985 ஆம் ஆண்டு அந்த தைக்கா சிதைக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தைக்காவை இல்லாமலாக்கி விட்டார்கள். இது தொடர்பில் அதன் நிர்வாகமாக இருந்த சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலிடம் கேட்டால் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறுகிறார்கள். இது தொடர்பில் பல வருடங்களாக நாங்கள் பேசி வருகிறோம். தொல்பொருளியல் ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும் இதற்கான தடையங்கள் நிறைய உள்ளது. இந்த விடயத்தில் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சேனநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் 6 அங்குலம் திறப்பு

east tamil

Team 16ன் தன்னலமற்ற சேவை

east tamil

உப்புவெளியில் போக்குவரத்து தடை

east tamil

மூதூர் கோட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் குகதாசனின் கோரிக்கைகள்

east tamil

வெருகல் காணி பிரச்சினை தொடர்பில் உறுதியளித்துள்ள அருண் ஹேமச்சந்திரா

east tamil

Leave a Comment