மேல், சப்ரகமுவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
வடக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் பல மழை பெய்யும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களிலும், களுதறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 50 மி.மீ. மழை வீழ்ச்ச‍ை எதிர்பார்க்கலாம்.
நாட்டின் மீது காற்றின் வேகம் சில நேரங்களில் (30-40) கிமீ வேகம் வரை அதிகரிக்கும். குறிப்பாக மத்திய மலைகள், வடக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் மேற்கு சரிவில் காற்றின் வேகம் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழைக்காலங்களில் தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.