முன்மொழியப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபை நிறைவேற்ற அரசாங்கம் காட்டும் அவசரம், சீனாவைப் சந்தோசப்படுத்தும் முயற்சியே என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
இன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இதன் விளைவாக இலங்கை இந்தியப் பெருங்கடலில் உலக வல்லரசுகளின் இரையாக இலங்கை மாறும் எச்சரித்தார்.
சீன பாதுகாப்பு மந்திரி அடுத்த மாதம் நாட்டிற்கு வர உள்ளார். இதற்குள் சீனாவை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கூறினார்.
இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றிற்கு எதிராக உலக நாடுகள் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வரும் நேரத்தில், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.