வருமான வரி விபரத்திரட்டை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு

Date:

2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி விபரத் திரட்டை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, வருமான வரிக்காகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது வரி விபரத் திரட்டுகளைத் தாக்கல் செய்தல் வேண்டும்.

இருப்பினும், இம்முறை முதன்முறையாக வரி விபரத் திரட்டுகளைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால், நவம்பர் மாதத்தில் திணைக்களத்தின் வருமான நிர்வாக முகாமைத்துவத் தகவல் கட்டமைப்புக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு கட்டமைப்பு நெரிசல் உருவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்தத் தொழில்நுட்பத் தாமதங்கள் காரணமாக வரி செலுத்துவோருக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் உரிய திகதிக்கு முன்னர் விபரத் திரட்டுகளைச் சமர்ப்பிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, 2026 டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது வரி விபரத் திரட்டுகளைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு எதிராக அபராதம் விதித்தல், தவறவிடப்பட்ட மதிப்பீடுகளை வெளியிடுதல் அல்லது சட்டத்தின் கீழான வேறுநடவடிக்கைகளை எடுத்தல் போன்ற எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்