சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் மீட்பு

Date:

பூஸா பகுதியின் மலிதுவவில், சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டதாக ரத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மலிதுவ பகுதியில் உள்ள வயல்வெளியில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், உயிரிழந்தவரின் முகத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

மேலதிக விசாரணைகளின் போது, ​​அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் ஒருவர், அதிகாலை 2:00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகத் தெரிவித்தார். நேற்று பிற்பகல் நிலவரப்படி, உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

பாதிக்கப்பட்ட நபர் வேறொரு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு, அங்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் திட்டமிட்ட தாக்குதல்கள் – ஐ.நா அதிர்ச்சி அறிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள்...

கண்டி இராச்சியத்தின் துப்பாக்கிகளை மீள கையளிக்க நெதர்லாந்து முடிவு

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கண்டி இராஜ்ஜியத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இலங்கைக்கு உரித்தான...

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்