தவறான உறவு சந்தேகத்தில் மனைவியை கொன்றுவிட்டு பொலிசில் சரணடைந்த கணவன்!

Date:

மனைவி தனது உறவினரான இளைஞர் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருப்பதாக குறிப்பிட்டு, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன், பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை (24) காலையில் வாகரை, பலால்சேனையில் இந்த சம்பவம் நடந்தது.

பாகல்சேனை, கோவில் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய காளிராசா மனோஜா என்பவரே கொல்லப்பட்டார். 26 வயதான அவரது கணவர், கொலையின் பின் பொலிசாரிடம் சரணடைந்தார்.

கூலி தொழிலாளியான ஜெகநாதன் சுஜீவன், காளிராசா மனோஜாவை திருமணம் முடித்து இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

கணவர் வேலைக்கு கடலுக்கு செல்லும் போது, வீட்டில் மனைவி தனிமையில் இருந்துள்ளார். அந்த சமயத்தில், மனைவியின் உறவினராக இளைஞன் ஒருவர், அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இதனையறிந்த கணவர் குறித்த இளைஞனை தனது வீட்டுக்கு வரவேண்டாம் என கண்டித்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் மனைவியிடம் இந்த கள்ளகாதல் தொடர்பாக கணவன் விசாரித்துள்ளார். அப்போது, தம்பதியரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்;து பொலிஸ் அவசர தொலைபேசி எண் 119 இலக்கத்துக்கு அறிவித்துவிட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்ததுடன் சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது. மனைவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க ப்பட்டுள்ளதாகவும் கைது செய்தவரை நீதிமன்றில் இன்று புதன்கிழமை (25) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்