ரயிலுடன் மோதிய விசேட அதிரடிப்படை வாகனம்

Date:

மிதிகமவில் உள்ள ரயில் கடவையில், சிவப்பு நிற எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒளிரும் நிலையில், அவற்றை அலட்சியப்படுத்தி ரயில் பாதையைக் கடக்க முயன்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜீப் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்த நால்வரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அந்த இருவரும் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காலியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற 714 இலக்க ரயில் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான ஜீப் வாகனம், விசேட அதிரடிப்படையின் மஸ்கெலியா பிரிவுக்குச் சொந்தமானது என்றும், தற்போது மிதிகம இடைக்கால முகாமில் இணைக்கப்பட்டிருந்தது என்றும் மிதிகம பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த வாகனமும் அதில் பயணித்த பணியாளர்களும் விசேட பணிக்காக மாத்தறை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

விபத்தின் தாக்கத்தால், ஜீப் வாகனத்தின் பின்பகுதி முற்றாக நசுங்கிச் சிதைந்திருந்ததுடன், அதன் ஒரு சக்கரம் கழன்று தூரத்தில் வீசப்பட்டிருந்தது. விபத்து இடம்பெற்ற ரயில் கடவையில் தடுப்பு வாயில்கள் இல்லையென்றாலும், விபத்து நடந்த வேளையில் அங்கு எச்சரிக்கை மணி மற்றும் விளக்குகள்  இயங்கிக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானை தாக்குதலுக்குப் பெண் பலி: அதிகாலை வேளையில் பரிதாபம்

அம்பாறை தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம்  மொரகஹப்பள்ளம் பகுதியில்...

மஹியங்கனை வரலாற்றுச் சிறப்புமிக்க மாவரகல விகாரையில் 6 அரிய புத்தர் சிலைகள் திருட்டு!

இலங்கையின் ஊவா மாகாணம், மஹியங்கனை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவரகல...

வெளிநாட்டிற்கு போன மனைவியின் கதி?: கல்லடி பாலத்திலிருந்து குழந்தைகளுடன் குதித்த கணவன்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் வாவியில் குதித்து தற்கொலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்