குட்டிமணி, தங்கதுரை சிலை விவகாரம் – சதீஸிடம் 3 மணி நேரம் விசாரணை!

Date:

வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் யாழ் நகரில் உள்ள தமது அலுவலகத்தில் தடுத்து வைத்து இன்று மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான குட்டிமணி தங்கதுரைக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவ முயற்சித்த விவகாரம் தொடர்பாகவே இரண்டாவது தடவையாக சதீஸிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணையில் சிலை நிறுவுவதற்கான பணம் மற்றும் நிதி மூலங்கள் எவ்வாறு கிடைத்தன என்பன தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸின் வீட்டுக்கு  ஏற்கனவே சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது தடவையாக விசாரணை நடத்தப்பட்டது.
spot_imgspot_img

More like this
Related

நாடு பூராகவும் சுகாதாரதுறையினர் 8 கோரிக்கைகளை முன்வைத்து 10 ம் திகதி தொடக்கம் போராட்டம்

இந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 8...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகளை...

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்