காத்தான்குடி பாலமுனையில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளுடன் இருவர் கைது வாகனம் ஒன்று மீட்பு

Date:

காத்தான்குடி பாலமுனை பகுதியில் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்ற 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சட்டவிரோத சுருக்கு வலைகளுடன் 2 பேரை இன்று வியாழக்கிழமை (05) அதிகாலையில்;; கைது செய்து காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டு ஊழல் மோசடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பினர் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான இன்று அதிகாலை 4.00 மணிக்கு பாலமுனை  கடற்கரைக்கு செல்லும் பகுதி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதன் போது கடற்கரையை நோக்கி பிரயாணித்த மூடிய சிறிய ரக வாகனம் ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நிறுத்தி சோதனையிட்ட போது அதில் சட்டவிரோத சுருக்கு வலைகளை கொண்டு செல்வதை கண்டுபிடித்ததை அடுத்து அந்த வாகனத்தின் சாரதி உட்பட இருவரை கைது செய்ததுடன் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சுருக்கு வலைகளையும்  மூடிய சிறிய ரக வாகனத்தையும் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து மீன் பிடியில் ஈடுபடுவதை கண்டித்து கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்னாள் மீனவ சங்கங்கள் மீனவர்கள் ஒன்றினைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அந்த திணைக்கள பணிப்பாளரிடம் மகஜர் கையளித்த போதும் அந்த திணைக்கள அதிகாரிகள்  இந்த சட்டவிரோத சுருக்கு வலை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பாக எது விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அசமந்தப் போக்கில் செயற்படுவதாக மீனவர்கள் கடும் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்