புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்

Date:

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும்
பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்!

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்
சட்டம்’, ஏற்கனவே நாட்டில் அமுலிலிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA)
விட மிகவும் மோசமானது என பல்வேறு தரப்பினராலும் எச்சரிக்கப்பட்டு
எதிர்க்கப்பட்டு வரும் நிலையிலும், அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதில்
தீவிரம் காட்டி வருவதை சமத்துவக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என
அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.
சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அரசாங்கம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றுமானால், நாட்டு மக்கள் “சட்டிக்குள்
இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த” நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
இச்சட்டத்தின் மூலம் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில்
சமூகத்தின் செயற்பாடுகள் கடுமையான ஆபத்துக்குள்ளாகும் என்பதோடு, நாட்டின்
ஜனநாயகக் கட்டமைப்பே கேள்விக்குறியாகும்.

சர்வதேச மட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மனித உரிமைகள்
கண்காணிப்பகம் (Human Rights Watch), சர்வதேச மன்னிப்புச் சபை  (Amnesty
International) ஆகிய அமைப்புகளும்; உள்நாட்டில் உள்ளூர் மனித உரிமைகள்
அமைப்புகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட பல முக்கிய தரப்பினரும் இச்சட்ட
மூலத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். மேலும்,
இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 25-க்கும் மேற்பட்ட
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அரசாங்கம் இச்சட்டத்தைக்
கொண்டுவருவதில் தீவிரமாகச் செயற்படுவது நாட்டு மக்களின் அடிப்படை
உரிமைகளைப் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கையாகும்.

இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், பழைய
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.
ஆனால், அதிகாரத்திற்கு வந்தவுடன் அதைவிடவும் மோசமான ஒரு சட்டத்தைக்
கொண்டுவரத் துடிப்பது, அவர்களின் இரட்டை வேடச் செயற்பாட்டையும் போலித்
தன்மையையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

எனவே, நாட்டின் ஜனநாயகத்தையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் நசுக்கும்
இந்த மனித உரிமைக்கு எதிரான சட்டமூலத்தைக் கைவிடுமாறு சமத்துவக் கட்சி
அரசாங்கத்தை வலியுறுத்துகிறது என அவ்வறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அறிவியல் மீது நம்பிக்கையில்லாத தமிழ் தேசியம்?

செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் கடந்த 110 நாட்களாக நடந்த அகழ்வுப்பணிகள்...

ரஷ்யா- உக்ரைன் இடையே ஒலேஷ்கி நகரில் போர்நிறுத்தத்தை மத்தியஸதம் செய்த ட்ரம்ப் மனைவி

அமெரிக்காவின் முதற்பெண்மணி மெலானியா டிரம்ப், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலேஷ்கி...

சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைகிறது!

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் சில நாட்களாக சுயநினைவிழந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்