ரம்பேவ, பொருலுஹின்ன கிராமத்தில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள் நேற்று (20) மின்னல் தாக்கியதில், அவர்களில் இருவர் உயிரிழந்தனர். மூன்றாவது பெண் பலத்த காயங்களுடன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரசங்கஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொருலுஹின்ன கிராமத்தில், நேற்று (20) மாலை 4:00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ரம்பேவ, பொருலுஹின்ன, நபடகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய கே. ஹேமாலி மற்றும் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய எம். டிலாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேற்று (20) மாலை ரம்பேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டன. ரம்பேவ, நபடகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர், இச்சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




