அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

Date:

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லொறி (cement mixer truck) ஒன்று, வீதியில் சென்ற பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த மோதலில் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான விபத்தினால் வீதியில் இருந்த சுமார் 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் மற்றுமொரு வாகனமும் முற்றாகச் சேதமடைந்தன; மேலும், மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

சிமெந்து கலவை வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...

யாழ் மாவட்ட செயலகத்தின் முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று...

ஞானசாரர் மன்னிப்பில் நடந்த தவறு: மன்னிப்பு கோரிய மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்