மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் இரவில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்

Date:

மட்டக்களப்பில் கல்லடி பாலத்தின் மேல் இருந்து வாவியில் வீழ்ந்து தற்கொலை செய்வதற்கு வாவியில் குதித்த 19 வயது யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றி மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) இரவு 8.00 மணிக்கு இடம் பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கல்லடி பழைய பாலத்தில் சம்பவ தினமான இன்று இரவு 8.00 மணியளவில்  யுவதி ஒருவர் அவரது பாட்டா மற்றும் கை பை குடை என்பவற்றை கைவிட்டு விட்டு தற்கொலை செய்வதற்கு பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார். இதன்போது வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டு உடனடியாக செயல்பட்டு வாவியில்; இருந்து யுவதியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து பொலிசார் 1990 அம்புலன்ஸ் வண்டி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதித்து யுவதி உயிரை காப்பாற்றியுள்ள தாகவும் குறித்த யுவதி பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும்  தற்கொலை செய்ய முற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை குறித்த பாலத்தில் இருந்து கடந்த மாதம் இளைஞர் ஒருவர் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதுடன் மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 12 ம் திகதிவரை 90 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் மாவட்ட பிரிவு புள்ளிவிபர தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது,

spot_imgspot_img

More like this
Related

சட்டப்படியே ஞானசாரரை மன்னித்தேன்

அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படியே, ஞானசார தேரருக்குத் தான் பொதுமன்னிப்பு...

பசில் ராஜபக்ஷவிற்கு பிடியாணை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்

இலங்கை நாட்டைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்