எழுத்தாளர், தொழிற்சங்கவாதி மு.சிவலிங்கம் காலமானார்

Date:

மலையகத்தின் சிரேஷ்ட எழுத்தாளரும், இலக்கிய ஆளுமையும், தொழிற்சங்கவாதியும், கலைஞருமான மு. சிவலிங்கம் காலமானார்.

தலவாக்கலையில் முத்து முருகன் மற்றும் அழகன் கண்ணம்மா தம்பதியினருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆரம்பக் கல்வியை தலவாக்கலை சென்பெட்றிக்ஸ் கல்லூரியிலும், ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் உயர்தரம் வரையிலும் கற்றார்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான அவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அவர், சிறுகதைகள், நாவல்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் திறனாய்வுகள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

சிறுகதை இலக்கியத்தில் தனக்கென ஒரு தனிப்பானியை உருவாக்கி, நகைச்சுவை உணர்வுடன் மக்கள் வாழ்வை வௌிப்படுத்தும் ஒரு படைப்பாளியாக காணப்பட்டார்.

மு. சிவலிங்கத்தின் ‘ஒப்பாரி கோச்சி’ எனும் சிறுகதைத் தொகுப்பானது அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

அது தவிர மலைகளின் மக்கள், ஒரு விதை நெல், வெந்து தணிந்தது காலம் உள்ளிட்ட சிறுகதைகளையும், பஞ்சம் பிழைக்க வந்த சீமை எனும் நாவல் உள்ளிட்ட பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை, அக்கரைப்பற்று மாநகர சபைகளுக்குக் கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்குக் கொழும்பு...

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு

அனோஜனுக்கா ஜனாதிபதியிடமும், சவூதி மன்னருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மனு அவமதிப்பான கருத்து ஒன்றை...

விசாரணைக்கு டிமிக்கி விடும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்