பாலமுனை விபத்தில் ஒருவர் பலி

Date:

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை – 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் சமது முபாரிஸ் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-பாருக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...

அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்...

‘உண்மையான போர் வீரர்களாக இருந்தால்…’: அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதி சவால்!

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் ஜனாதிபதி மசூத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்