தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

Date:

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய விஷமிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத்தூபி திங்கட்கிழமை விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சி.வீ.கே.சிவஞானம்,
தந்தை செல்வாவின் தூபி மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குறித்த ஈனச் செயலை புரிந்தவர்கள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்றார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...

ஊடகவியலாளர் பிரகாஷின் நினைவு நிகழ்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் 5ஆவது ஆண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்