ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் சதி நாடகத்துக்கே 6 கட்சிகள் கூட்டு — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

Date:

நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜிய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்ற அதற்கான பலத்தை காட்ட இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டு இது ஒரு நிகழ்ச்சி நிரல்.எனவே இந்த சதி நாடகத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து நின்று தடுத்து நிறுத்தாவிட்டால் நாங்கள் இழந்த இந்த தியாகம் வீணாகிபோய்விடும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின் வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்றது இதன் போது உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்

இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன இந்த மண்ணிலே மக்களுக்காக நடந்தேறியுள்;ள தியாகங்கள் என்ன இந்த தியாகங்கள் எதற்காக நடந்தது என்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும.;

இந்த இலங்கை தீவில் தமிழர்கள் கடந்த 78 வருடங்களாக அடிமைகளாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர் அதற்கு காரணம் இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற பாராளுமன்றம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டிருக்கின்றது இந்த அரசியல் அமைப்பு காலம் காலமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் நேர்மையாக இருந்த சில சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன

1972 ம் அண்டு 78 ஆண்டு அரசியல் அமைப்புக்கள் எங்கள் விருப்பத்துக்கு மாறாக நிறைவேற்ற ப்பட்டுள்ளது இன்றும் அந்த அடிமைசாசனமான ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தான் இந்த மண்ணிலே இவ்வளவு அழிவுகளும் தியாகங்களும் நடந்தேறுவதற்கு காரணமாக இருந்தது.  1987 யூலை 29 ம் திகதி முன்னாள் மறைந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா இந்திய பிரதமர் இராஜீவ் காந்தியும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஆசைக்கு மாறாக தங்களின் விரப்பத்துக்கு ஏற்றவாறு ஒப்பந்தத்தை நிறைவேற்றியதால் இன்று இவ்வளவு இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

எமது போராட்டம் 50 ஆயிரம் மாவீரர்களையும் 4 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களையும்  இழந்து முன்னாள் போராளிகள் இயங்க முடியாத நிலையில் இந்த தாய் நிலத்தில் பிச்சை எடுக்கும் நிலைப்பாட்டில் கூட இருக்கினர் என்றால் மிகவும் ஒரு இறுக்கமான  தழிழ் தேசிய நிலைப்பாட்டடில் போராடிய தியாகம். ஆகவே இந்த விடயங்களை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்

இன்று இந்த மண்ணில் நடந்தேறுகின்ற ஆட்சி அமைப்புக்களை பார்க்க வேண்டும் தமிழர்களுடைய தாயகம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருக்கின்றது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய நிலம் பறிபோகின்றது மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று, பிள்ளையர் இருந்த இடத்தில் புத்தர் சிலை தாந்தாமலையில் மீண்டும ஒரு கட்டுமானம் செய்ய முடியாது வடக்கில் மயிலிட்டி விகாரை போராட்டம்  இவ்வாறு எல்லா இடங்களிலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஏன் என்றால் எதிரி எங்களை தொடர்ந்து இனழிப்புக்கு உட்படுத்தும் வேகத்தை மெது மெதுவாக முன்நகர்த்தி வருகின்றதுடன் வடக்கு கிழக்கை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர  சட்டசபைகளை ஒருங்கிணைத்து முற்று முழுதாக தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான கைங்கரியத்தை மிக கட்சிதமாக செய்துவருகின்றனர்

இந்த நாட்டிலே ஏதே நல்லது நடப்பதாக காட்டுகின்றனர். உயிர்த ஞாயிறு தாக்கல் செய்தவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர் அதேபோல் ஊழல் வாதிகள் தண்டனை வழங்கப்படுகின்றது அதில் எங்களுக்கு ஒரு மாற்று கருத்தும் கிடையாது.

ஆனால் அவ்வாறான நிலைப்பாட்டை காட்டிக் கொண்டு தமிழர்களுடைய மண்ணில் ஏன் புத்தவிகாரை மிளைக்கின்றது? மயிலத்தமடு மேச்சல் தரையில் மாடுகளை கட்டி சுடுகின்றனர்  அங்கு விரட்டியடிக்கப்படுகின்றனர் இது எல்லாம் ஏன்? நடக்கின்றது.

ஜனாதிபதி அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிக தெளிவாக புதிய அரசில் அமைப்பு நிறைவேற்றப்படும் எனவும் அந்த புதிய அரசியல் அமைப்பு கடந்த 2014 தொடக்கம் 2019 வரை மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட தொடருவோம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆபத்தை உணர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நாங்கள் அரசியல் கட்சி தலைவர்களும் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்தாவிட்டால் நாங்கள் இழந்த இந்த தியாகம் வீணாகிபோய்விடும் என்ற நிலையில் அந்த கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்

ஆனால் அந்த அரசியல் அமைப்பு இப்போது நிறைவேற்றப் போவதில்லை என தமிழரசு கட்சியின் பேச்சாளரும் இப்போது பதில் செயலாளருமாக இருக்கும் எம் சுமந்திரன் தெட்டதெளிவாக தெரிவித்து கொண்டார்.

அண்மையில் இந்த 6 கட்சி கூட்டுக்கள் இந்த கூட்டில் முதலாவது சொல்லப்பட்ட விடயம் புதிய அரசியல் அமைப்பு விவகாரம்  ஏன் என்றால் நல்லாட்சி காலத்தில் அந்த அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் சுமந்திரன் கிட்டதட்ட தலைமை எனவே அந்த அரசியல் அமைப்பு எப்படியாவது நிறைவேற்றி ஆகவேண்டும். அதற்கான பலத்தை இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டை செய்வதற்கு  முன்வந்துள்ளார் இது ஒரு நிகழ்ச்சி நிரல்.

இங்கு இருக்கும் முஸ்லீம்; இனவாத தலைவர்கள் எங்கள் விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் மொழி பேசுகின்ற மக்களுக்கான விடுதலைப் போராட்டம். தமிழ்பேசும்; மக்கள் வடக்கு கிழக்கை இணைத்து ஒரு தேசத்தை அங்கீகரிப்பதற்கான போராட்டம் இந்த அடிமைசாசனமாக இருக்கும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிராகரித்;து சிங்கள மக்கள் போன்று ஒரு சம உரிமையுடன் வாழ ஏற்படுத்தபட்ட போரட்டம்

எனவே அவ்வாறு நடந்த போராட்டத்தை கொச்சைபடுத்திவிட்டு இன்று அந்த போராட்டம் தவறு என்று கூறிய நபர்கள் 6 கட்சிகளை ஒருங்கிணைத்து ஏதே தமிழர்களுக்கு நல்லது செய்ய போகின்றனராம். எனவே மக்கள் தெளிவாக பார்க்க வேண்டும் அந்த கூட்டில் இருப்பவர்களை பார்த்தால் முஸலீம் காங்கிரஸ் ரவூஹக்கிம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் கணக்காளரை போட தடையாக இருக்கும் அப்படிபட்ட ஒருவர் தமிழருக்கு நல்லது செய்யப் போகின்றாராம்? யாhர் என்பதை எமது மக்கள் உணர்ந்து முடிவெடுக்க வேண்டு;ம்

இந்த நாடகங்களை தவிர்த்துவிட்டு போராளிகள் நலன் புரிசங்கம் செய்யும் இந்த பணி மிக மகத்தானது இப்படிப்பட்ட போராளிகள் இந்த தாயகத்தில் இருக்கும் கட்சி தலைவர்கள் அனைவரையும் கூப்பிட்டு நாங்கள் என்னத்துக்காக போராடுகின்றோம்  அந்த முடிவுகளை எடுக்க வேலை செய்ய வேண்டும் இராணுவம் புலனாய்வுகளால் பல தடைகள் இருக்கின்றது அதனை எதிர் கொண்டு எங்கள் மக்களின் விடுதலைக்காக அனைவரையும் இணைத்து கொண்டு  இந்த அரசு ஏக்கிய ராஜிய அரசியல் அமைப்பை நாங்கள் அனைவரும் எதிர்த்து நின்று போராடவேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்