நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (04) மூடப்பட்டிருக்கும் என நுவரெலியா கல்வி வலயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் தேவையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பின்னர் வெளியிடப்படும் என்றும் கல்வி வலயம் தெரிவித்துள்ளது.




