மட்டு சிறையில் போதை வியாபாரியான அண்ணனை கொழும்பில் இருந்து பார்வையிட வந்த தம்பி அவரது நண்பர் போதை பொருளுடன் கைது

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த சிறையில் உள்ள போதை பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய இருவரை  ஜஸ் மற்றும் ஹெரோயின் போதை பொருள்களுடன் நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

கடந்த ஏப்ரல் 7ம் திகதி 7 அரைக் கிலோ கொண்ட ஜஸ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலை சம்பவத்தை அடுத்து அங்கிருந்து குறித்த போதை வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் ஆகிய இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மட்டு தலைமைய பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன்போது அங்கு அறையில் இருந்த தொட்ட கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிக்கிராம் ஹரோயின் 500 மில்லி கிராம் ஜஸ் போதை பொருட்களுடன் கைது செய்தனர்

இதில் போதை பொருள் வியாபரியின் சகோதரன் ஏற்கனவே போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்த உள்ளதாகவும் அவர்கள் இருவரும் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆயர்படுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...

பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்த போதைப்பொருள் – இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்து!

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும்...

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்