யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

Date:

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

நேற்று (27) பண்டத்தரிப்பு நகரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

வீதிப்போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இளவாலை பொலிசார், ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் வருவதை அவதானித்து, அவர்களை வழிமறித்தனர்.

எனினும், இளைஞர்கள் பொலிசாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

பொலிசார் அவர்களை விரட்டிச்சென்று வழிமறித்த போது, இரண்டு இளைஞர்கள் தப்பியோடினர். ஒருவர் அகப்பட்டார்.

சிக்கிய இளைஞன், பொலிசாருடன் தகராற்றில் ஈடுபட்டு, அவர்களை தாக்க முயற்சித்தார். அந்த இளைஞனை பொலிசார் கைது செய்து, தமது வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, இளைஞன் பெரும் ரகளையில் ஈடுபட்டு, வாகனத்தில் ஏறாமல் அடம்பிடித்தார். மதுபோதையில் இளைஞன் செய்த ரகளையால் சுமார் 30 நிமிடங்கள் அங்கு பரபரப்பான நிலைமை நீடித்தது.

பின்னர் ஒருவழியாக இளைஞனை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய போது, அவர் நிறை போதையில் இருந்தது தெரியவந்தது.

அவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மாநாடு அறிவார்ந்த போராட்ட வடிவமாகும்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தாய்மார்களின் நீதிகோரிய போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது நியாயம் விரும்பும் சகலரினது...

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்