நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

Date:

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை பகல் நேரத்தில் வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு, ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

பொதுமக்கள், பணியிடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், வீட்டிற்குள் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளவும், குழந்தைகளை வாகனங்களுக்குள் கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும், வெளியில் இருக்கும்போது நிழலைத் தேடவும், போதியளவு நீர் அருந்தவும், இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்