ஏறாவூர் தவிசாளருக்கு எதிராக போராட்டம்

Date:

தளவாய் வீட்டு திட்ட கிராமத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து தரவில்லை என்று கூறி ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏறாவூர் தமிழரசுக் கட்சியின் நகர சபை உறுப்பினர் ரகுவரனால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தளவாய் வீட்டு திட்டத்தில் உள்ள கிராம மக்கள் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தனர்.

தங்களுக்கான வீதிகள் புனரமைப்பு செய்யப்படவில்லை, காட்டு பாதைகளை துப்பரவு செய்து தரவில்லை, வீதி விளக்குகள் போட்டு தரவில்லை என்றும் பல தடவைகள் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஏறாவூர் பற்று தவிசாளரிடம் முறையிட்டும் அதற்கான தீர்வுகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் கலந்து கொண்டு இதற்கான தீர்வுகளை பெற்று தருவதாக வாக்குறுதியளித்தார்.

தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் நகர சபை உறுப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரான நாகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்